Tuesday, January 26, 2010

கற்றுகொடுக்க கற்றது

அபிநயா தனியார் கம்பணியில் வேலைப்பார்த்துக்கொண்டிருக்கிறாள். நல்ல திறமைசாலி. perfectionist. எல்லாம் நேரப்படி சரியாக நடக்க வேண்டும் என்ற சிந்தனைக்கொண்டவள். கணவன் அரவிந்த். இவர்களுக்கு ஒரு மகன் அனிருத் ஐந்து வயது. செல்லமாக அனி என்று அழைப்பார்கள்.

அபிநயா வேலையிலிருந்து வீட்டிருக்கு வர மணி 8 ஆனது. உள்ளே நுழையும் போதே ஏன் அரவிந்த் உஙக் office bag இங்க இருக்கு.?! வைக்க வேண்டிய இடத்தில வையுங்கோனு 100 தரம் சொல்லி ஆச்சு.. நீங்க கேக்குரதே இல்ல.. பாருங்கோ.. அனி நம்ள பாத்து தான் கத்துபான். "சாரிம்மா. இனிமேல் சரியா வைக்கறேன்." என்றான் அரவிந்த் டிவி பார்த்க்கொண்டே.

மணி 8 ஆகரது.. அனி .. நீ சாப்பிடச்சா..?! இல்ல அம்மா.. அந்த சமையல் மாமி சமைச்ச உப்புமா பிடிக்கல..நீ வேற பண்ணி குடு நான் சாப்பிடுறேன்.. வர வர உனக்கு நாக்கு ரொம்பவே நீளமாகிடுத்து.. சரி பொங்கல் ஒகே வா..?! சரிம்மா..

அரவிந்திடம் கேட்டாள் "நீங்க அப்பா அம்மா சாப்பிட்டாச்சா.?!". நானூம் அப்பாவும் சாப்பிட்டாச்சு. அம்மா இன்னும் சாப்பிடலை. "அம்மா..!! நீங்க என்ன சாப்பிட போறேள்..?!" என்று மாமியாரிடம் கேட்டாள். மாமியாரும் "அபி எனக்கும் பொங்கல் வெச்சுடுமா".. சரிமா என்று சொல்லிக்கொண்டே cooker இல் பொங்க்ல் வைத்தாள் அபி.

பொங்கலை வைத்துவிட்டு வந்து அரவிந்த் அருகில் சோபாவில் வந்து உட்கார்ந்தாள். "அரவிந்த்..!! வர வர office வீடு னு எல்லா இடத்துலையும் எனக்கு வேலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. அம்மாவுக்கு fracture ஆன அப்புறம் சமையல் மாமி சமைக்கறது அம்மாவுக்கு பிடிக்கறது இல்ல. அதனால தினமும் காலையில் ஒரு சமையல் சாயங்கலம் ஒரு சமையல்னு சரியா இருக்கு. பாருங்கோ. உங்க தம்பி, அம்மாவுக்கு fracture ஆன அப்புறம் இந்த 3 மாசமா வந்துகூட பார்க்கலை. அப்பா அம்மா இருந்த flat ஐ விற்க்கலாம்னு சொன்னவுடனே நீயும் மன்னியும் வேலை பார்கறெள். double earning. அதனால இந்த flat ஐ நானே எடுத்துக்கறேனு சொன்னான். நானும் சரினு சொன்னென். இப்போ அவனுக்கு நானும் வேலைக்கு போறேனு மறந்து போச்சா. அம்மாவை அவா ஆத்துக்கு கூட்டிண்டு போயி கொஞ்ச நாள் வெச்சுக்க சொல்லுங்கோ.." என்றாள்.

அரவிந்திற்க்கு என்ன சொல்வதென்றெ தெரியவில்லை. அபி சொல்வது நியாயமாகவே பட்டது. இருந்தாலும் அம்மாவிடம் போய் இதை எப்படி சொல்வது..?! போன வாரம் அம்மா சொன்னதை நினைத்து பார்த்தான். "அரவிந்தா..!! அபி மாதிரி வராதுடா. காலையில் எழுந்த உடனே சஹஸ்ரநாமம், பூஜை, சமையல்னு என்ன ஒரு சுறுசுறுப்பு. வீட்ட எப்படி வெச்சு இருக்கா பாரு. நான் ஏதாவது கேட்டால் கூட முகம் சுளிக்காமல் செய்யுறா. உன்கிட்டையும் குழந்தைகிட்டையும் என்ன ஒரு அனுசரனை. பார்க்கவே எனக்கும் அப்பாக்கும் மனசு நிறைஞ்சிருக்கு. இதே நான் உன் தம்பி ராஜா ஆத்துக்கு போனால் எப்போ பார்தாலும் அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே சண்டை. அவ வீட்டையும் clean ஆ வெச்சுக்க மாட்டா. குழந்தையும் போட்டு அடிப்பா. எங்க கிட்டையும் ஒரு வெறுப்பு. எனக்கு அங்க பாந்தமே படாது." என்றாள். இப்படியிருக்க அம்மாவை எப்படி அங்கு அனுப்பிவைக்க முடியும்.

யோசித்துக்கொண்டிருக்கும் போதே மணி 8:45 ஆகியிருந்தது. அதற்குள் அபி தனக்கே உரித்தான வேகத்துடன் எல்லா வேலைகளையும் முடித்திருந்தாள். ராத்திரி தூங்க போவதற்க்கு முன்னால் brush பண்ணிவிட்டு தூங்குவது வழக்கம். அதுவும் ஆயிற்று. "அனி வாடா.. டைம் அகிடுத்து. நீயும் வந்து brush பண்ணு என்றாள். உடனே அனி "அம்மா..!! நீ brush பண்ணிட்டியா" என்று கேட்டான். "ஆச்சுடா. அம்மா உன்னை ஏதுவும் செய்ய சொல்லறதுக்கு முன்னாடி அம்மா செஞ்ச்சுட்டு தான் சொல்லுவென். போடா..போ.. போய் brush பண்ணு" என்றாள்.

அபிநயாவிற்க்கு பொரி தட்டியது. ஒரு சின்ன பழக்கம் நைட் brush பண்ணுறது. அதுக்குகூட அவன் நீ பண்ணிட்டியானு கேக்கறான். இந்த பழக்கம் அனிக்கு வர நான் 6 மாசமா நான் night brush பண்ணுறேன். ஒவ்வொன்னும் அவன் நான் செய்தால் தான் கத்துக்கறான். அப்போ அப்பா அம்மாகிட்ட அவன் மரியாதையாய் பாசமாய் இருக்க..?!

அரவிந்த் bedroom க்குள் நுழைந்தான். உடனே அபிநயா "பாருங்கோ.. நீங்க ராஜா ஆத்துக்கு அப்பா அம்மாவை அனுப்ப வேண்டாம். அவா எப்போ போக நினைக்கறாளோ அப்போ போகட்டும். நம்ப போக சொல்ல வேண்டாம்." அரவிந்திற்க்கு ஒரே சந்தோஷ்ம். "ஏன் டா..?!" .. "அனிருத்.. நாளைக்கு என்ன பண்ணணுமோ அதை நான் இன்னிக்கே பண்ணறேன். அவனுக்கு கத்துக்குடுக்கறதுக்கு முன்னாடி நான் கத்துக்கறேன்." அரவிந்திற்க்கு ஏக சந்தோஷம்.

அனி brush பண்ணியிருந்தான். அபிநயா "அனி..!! இனிமேல் தினமும் பாட்டி தாத்தாவோட கொஞ்ச நேரம் spend பண்ணு. நைட் தூங்க போகறதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் பேசிட்டு வா." சரி என்றவன் பாட்டி தாத்தா ருமிற்க்கு போனான்.

அவன் வருவதற்க்குள் அபி தூங்கியிருந்தாள். வந்த அனிருதும் அரவிந்தும் அவளுக்கு கன்னத்தில் முத்தமிட்டு good night சொல்ல அபியின் நாள் இனிதே 9 மணிக்கு முடிந்தது.

1 comment:

  1. கதை நல்லா இருக்கு. ஆனா “இதனால் தெரிய வரும் நீதி யாதெனின்” அப்படின்ற தொனில தெளிவா சொல்ல வர விஷயத்தை சொல்லாம, முடிவை மட்டும் சொல்லி காரணத்தை படிக்கறவங்களே புரிஞ்சுக்கறா மாதிரி விடறது கதையின் லெவலை இன்னும் கொஞ்சம் உயர்த்து. இருந்தாலும், ஆரம்ப முயற்சிக்கு இது ரொம்ப நல்லாவே வந்திருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete