Tuesday, January 26, 2010

காதலை சொல்ல பயம் .... எது வரை...?!

அவன் பரத்வாஜ் BE படித்துக்கொண்டிருந்தான். அவள் பாவனா. அதே கல்லோரி.. அதே வகுப்பு. இருவரும் ஒரே ஸ்கூல் முதல் வகுப்பிலிருந்து இதோ கல்லோரி வந்தும் நல்ல நண்பர்கள். அவர்கள் குடும்ப நண்பர்கள் கூட.

பரத் மனதில் பாவனாவிற்க்கான காதல் டன் கணக்கில் இருந்தது. அவளின் அழகான தோற்றம் அவன் கண்களிலும் மனதிலும் நிறைந்திருந்தது. கவிதையாய் காதல் இருந்தாலும் காதலை விட மனதில் பயம் அதிகமாக இருந்தது. நம் காதலை அவளிடம் சொல்லி அவள் நான் உன்னிடம் நட்பாக தான் இருந்தென்னு சொல்லிட்டால்..?! ஐய்யோ..!! குடும்ப நட்பு கெட்டுவிட்டால்.. கடவுளே.. இப்படி எத்தனையோ சிந்தனைகள். சரி நல்ல படியா காலேஜ் ஐ முடிச்சுட்டு நல்ல வேலை ஐ பார்த்துட்டு சொல்லிக்கலாம். ரெண்டு குடும்பமும் நண்பர்கள் தானே பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தான்.

பாவனா இயல்பிலேயே பயந்த சுபாவம். ஒவ்வொரு பரீட்சைக்கு போகும்போதும் "பரத்.. இந்த paper எனக்கு clear ஆகாதுடா. படிச்சது எல்லாம் மறந்து போச்சு" என்று அழுவாள். பரத் தான் 100 சமாதானம் சொல்லி தோளை தட்டி ஹாலுக்கு கூட்டி போவான். இருவரின் பெயரும் alphabetical order ல் அடுத்து அடுத்து வரும். வினா தாளை பார்த்தவுடன் அவள் முகம் ப்ரகாசிக்கும். அவன் ஒகே என்று கண்களால் சொன்ன பிறகே எழுத தொடங்குவாள். நல்ல மார்க்கும் வாங்குவாள். இப்படி நன்றாக படித்த பரீ£ட்சைக்கே பயப்படும் பெண் காதலை எப்படி சொல்லுவாள்.?! தினமும் இன்றாவது பரத் என்னை காதலிக்கறேன்னு சொல்லனும்னு கடவுளை தான் வேண்டிக்கொண்டிருப்பாள். அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். என்றாவது ஒரு நாள் சொல்லுவான் என்ற நம்பிக்கையில் மௌவுனமாய் இருப்பாள்.

இப்படி இவர்கள் மௌனமாய் இருக்க காலம் கடந்து கொண்டேபோனது. ஆயிற்று 4 ஆண்டுகள் ஒடியே போனது. கல்லூரி வாழ்க்கையும் இனிதே முடிந்தது. இருவருக்கும் வெவ்வெரு நல்ல கம்பனிகளில் வேலையும் கிடைத்தது. பரத் கார் வாங்கினான். தான் ஆபிஸ் போகிற வழியில் பாவனாவையும் அவள் ஆபிஸில் விட்டுவிட்டு சென்றான். காரில் போகும்போது சில சமயம் FM இல் "மனதிலே உள்ள காதலை இறக்கி வைப்பது தொல்லையா..?!" போன்ற பாடல் வரிகளைக் கேட்க்கும் போது மௌவுனமாய் புன்னகைப்பர் இருவரும்.

ஒரு நாள் பாவனாவும் பரத்தும் வீட்டிற்க்குள் நுழைய பரத்/பாவனாவின் பெற்றொர் தம்பி தங்கை என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். நுழைந்தவர்களுக்கு பேரதிற்ச்சி காத்திருந்தது. அம்மாவே சொன்னாள் "பாவனாவிற்க்கு ஒரு வரன் வந்திருக்கு. பையன் மலேசியாவில் Engineer ஆ இருக்கான். நல்ல அழகாய் இருக்கிறான். நல்ல குடும்பம் என் friend பையன் தான். ஜாதகம் நல்லா பொருந்தி இருக்கு. அவாளுக்கு பாவனாவை பிடிச்சிருக்கு. பாவனா சரினு சொல்லிடிட்டால் அடுத்த மாசமே கல்யாணம்" அம்மா ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

ஐய்யோ அம்மா..!! வீட்டில் நானிருக்க உனக்கு அவளுக்கு வேறு ஒருவனை பார்க்க எப்படி அம்மா மனசு வந்துது. என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. பாழாய் போன பயம் உன்மையை சொல்ல விடாமல் தடுத்தது. "குட் அம்மா..!! உன் செலெக்ஷன் நல்லா தான் இருக்கும்" என்றான் பரத். அதிர்ந்தாள் பாவனா. நீ என்னை லவ் பண்ணுறேனு நினைச்சேனே. இல்லையா..?! தப்பா புரிஞ்ச்சுண்டேனோ..?! இனி என்ன செய்வது என்று தெரியாமல் உங்க இஷ்டம் என்றாள் அம்மாவிடம்.

சொன்னது போலவே ஒரு மாதத்தில் பாவனா திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்க்கு ஒரு வாரத்திற்க்கு முன்னால் பரத் அமெரிக்கா சென்றுவிட்டான். போனதிலிருந்து சரியாக வீட்டிற்க்கு போன் மெயில் செய்யவில்லை. பாவனாவை மறக்க முயற்சி செய்துகொண்டிருந்தான். முதலில் அப்பா போன் செய்து பேசினார். 6 மாதம் கழித்து அவரும் பேசவில்லை பரத்தும் பேசவில்லை. அமெரிக்கா வாசம் ஒராண்டு நிறைவுற்றது. கிளம்பி சென்னை வந்தான் பரத். வந்தால் வீடு களை இழந்து இருந்தது. அம்மாவின் அழுது அழுது வீங்கிய முகம் அப்பாவின் சோர்வு, பரத்தை மிகவும் கலவரப்படுத்தியது. என்ன என்று அவன் கேட்டது தான் தாமதம் அம்மா அழத்தொட்ங்கினாள்.

தம்பி சொன்னான். "அண்ணா..!! பாவனா அக்காவை கல்யாணம் பண்ணிண்டவன் ஒரு fraud. அவனுக்கு அங்க ஒரு மலேசிய பெண்ணுடன் தொடர்பாம். அக்காவை ஒரு வேலைக்காரி மாதிரி treat பண்ணியிருக்கான். passport/visa எல்லாத்தையும் வாங்கி வெச்சுண்டு அக்காவை அடிச்சு ரொம்ப மிரட்டி இருக்கான். 6 மாசம் முன்னாடி சிங்கப்பூரில் இருக்குற நம்ப சுரேஷ் அண்ணா எதேச்சையா மலேசியா போயிருக்குபோது அவா ஆத்துக்கு போனபோது தான் நடந்தது தெரிந்தது. அப்புறம் சுரேஷ் அண்ணா அவனிடம் சண்டைப்போட்டு passport/visa papers எல்லாம் வாங்கி பாவனா அக்காவை சென்னைக்கு அனுப்பி வச்சா. அப்புறம் போலீஸ் கேஸ் அது இதுனு போய் 2 நாளைக்கு முன்னாடி தான் mutual consent ல divorce வந்திருக்கு. விசாலம் மாமிக்கு divorce paper வந்ததும் ஒரே நெஞ்சு வலி. எங்க எல்லாருக்கும் மனசே சரி இல்லை அண்ணா" தம்பி சொல்ல சொல்ல நிலை குலைந்தான் பரத். "நான் தானேடா வரன் பார்த்தேன். இப்படி ஆகும்னு நான் கனவுல கூட நினைக்கலை. பாவனாவை பார்த்து பார்த்து மாமி மாமா படுற வேதனை எங்களால் பார்க்கவே முடியலை" என்றாள் அம்மா.

ஒரு 10 நிமிடத்தில் அனைவரும் பாவனா வீட்டிற்க்கு கிளம்பினர். கதவை திறந்தாள் பாவனா. "ஒளி இழந்த முகம்" இந்த வார்த்தைக்கு அர்த்த்ம் நன்றாக புரிந்தது பரத்திற்க்கு. அம்மாவின் மடியில் சாய்ந்து அழத்தொடங்கினாள் பாவனா. அம்மாவும் விசாலம் மாமியும் மாறி மாறி பாவனாவின் முன்னாள் கணவனை சபித்துக் கொண்டிருந்தனர் "படுபாவி.. பாவனா வாழ்க்கையை இப்படி பாழாக்கிட்டானே..." என்று.

"பாவனா வாழ்க்கையை பாழாக்கியது அவன் இல்லை. நான் தான்" என்று பரத் ஹால் அதிர கத்தினான். பாவனா உட்பட யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்.. தாழ் வெடிக்கத்தொட்ங்கியது. தொடர்ந்தான் பரத் " அம்மா..!! அவன் பாவனாவை கல்யாணம் பண்ணிண்டு துரோகம் பண்ணிணான். நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்காமல் துரோகம் பண்ணிணேன். பார்த்தால் நான் தானம்மா பெரிய துரோகி." என்னடா சொல்லுறே..?! என்றாள் அம்மா புரியாதவளாய்.

"அம்மா..!! ஸ்கூல், காலேஜ் எப்போலருந்துனு தெரியாது. ஆனால் வருஷ கணக்காய் அவளைக் காதலிக்கிறேன். இன்னுமும் கூட. ஆனால் சொல்ல தைரியம் இல்லம்மா. பயமாய் இருந்தது. ரொம்பவே பயமாய் இருந்தது. இன்று என் பயத்தால் இவள் வாழ்க்கை நாசமாய் போனதை என் கண்ணால் பார்க்கும் வரை பயம். அவள் மனதில் நான் இருக்கிறேன்னு தெரிந்தும் எனக்கு பயம். 1000 பயம் இருந்தது அம்மா..!! காதலை சொல்லாமல் அவளை இழக்க போகிறோம் என்ற பயத்தை விட காதலில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் தான் மேலோங்கி இருந்தது. நான் என் காதலை சொல்லாமல் போனால் அவள் திருமண வாழ்க்கை பாதித்து விடுமோ என்ற எண்ணம் மட்டும் எனக்கு ஏனோ வரவில்லை. அவளுக்கு அவனிடம் ஒரு காதல் வரவில்லை என்றால்..?! அவன் பாவனாவிடம் அன்பாய் இல்லை என்றால்..?! இப்படி எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. யோசித்திருந்தால் நிச்சயமாக இந்த நிலைமை வர விட்டிருக்க மாட்டேன்."

"அம்மா..!! என்னால் அவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. இனி அவ கஷ்டப்பட்டால் என்னால் அதை தாங்க முடியாது. நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டேன்." என்றான் பரத் தீர்க்கமாக. அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாய் இருந்தாலும் அவன் கருத்தை நிறைந்த மனதுடன் ஒத்துக்கொண்டனர்.

அழுது கொண்டிருந்த பாவனாவை நெருங்கினான். "அழதேடா. இனிமேல் எல்லாம் நல்லதா நடக்கும்" என்று தோளை தட்டிக்கொடுத்தான். இம்முறை தோழனாக அல்ல கணவனாக. வாழ்க வளமுடன்.

1 comment:

  1. ஒரு அருமையான simple & straight forward-ஆன romance story... நல்லா இருக்கு.

    ReplyDelete